• Feb 22 2025

நான் என்ன லூசா? படு விமர்சனத்திற்கு உள்ளாகும் உதயநிதியின் ட்விட்! 13 வருடங்களின் பின் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜய், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார்.

'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தனது கட்சியை அறிவித்த நடிகர் விஜய், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல், உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் போட்டியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.


இவ்வாறு அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, பல்வேறு பக்கத்திலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்க, உதயநிதி ஸ்டாலினும் விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் பற்றி 13 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த ட்விட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.


அதன்படி அவர் பகிர்ந்த பதிவில், காமெடி பண்ணாதீங்க ப்ரோ...விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா என்னை பதிவிட்டு இருக்கிறார் உதயநிதி.

தற்போது இந்த ட்விட் மீண்டும் வைரலாகி படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


Advertisement

Advertisement