தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி முருகன் படத்தில் கொடுத்த கியூட் ரியாக்ஷன் பலரையும் கவர்ந்தது. அதன் பின்பு கீர்த்தி சுரேஷுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.
இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி போன்றவர்களின் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்பு கீர்த்திக்கு பட வாய்ப்புகள் குறையவே பாலிவுட் பக்கம் சென்றார். ஆனால் அங்கும் அவருடைய நடிப்பில் வெளியான படம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் காலையில் உடற்பயிற்சி செய்யும் போது அவருடைய செல்லப் பிராணியான நாய்க்குட்டி அவருடைய முகத்தில் கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பொதுவாகவே நடிகைகள் நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடுவது தொடர்பில் வீடியோக்களை வெளியிடுவார்கள். திரிஷா கூட சமீபத்தில் தன்னுடைய நாய்க்குட்டியுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, கீர்த்தியின் செல்ல நாய்க்குட்டி அவரின் கன்னங்கள், உதடு, நெற்றி, கழுத்து, முடி என ஒரு இடத்தை விட்டு வைக்காமல் நக்கியும் முத்தம் கொடுத்தும் கடித்து இழுத்தும் விளையாடும் வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நான் பிறந்திருக்கக் கூடாதா? கீர்த்தி புருஷன் பாவம் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Listen News!