தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன் பின்பு கதாநாயகனாக உருவெடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அந்த படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், இந்த படத்தை தானே இயக்கி நடித்தார். அதன் பின்பு அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய டிராகன் படத்திலும் நடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.
பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது படமான டியூட் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருந்தார். இந்தப் படமும் வெளியாகி நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் 2கே கிட்ஸ்க்கு பிடித்த நடிகராக காணப்படுகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய மூன்று படங்களையும் தொடர்ச்சியாக பார்த்து ரசித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது .
அதன்படி அதில் அவர் கூறுகையில் , தொடர்ச்சியாக மூன்று படத்தில் நடித்துள்ளேன். இந்த ஹார்டிக் வெற்றிக்கு காரணம் நான் அல்ல நீங்கள் தான். முக்கியமாக தமிழ் மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். மேலும் என்னை உருவாக்கிய ரவி மோகன், ஐசரி கணேஷ், இயக்குநர்கள், டாக்டர்கள் என்று பலருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
அத்துடன் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா, தெலுங்கு போன்ற இடங்களிலும் டியூட் படம் வெற்றி பெற்றதை முன்னிட்டு அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து இருந்தார். தற்போது இவருடைய வீடியோவை பார்த்த பலரும் பிரதீப் மேலும் வளர வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!