• Oct 29 2025

அருவருப்பா இருக்கு, உங்க குடும்பத்துல இப்படி நடந்தா ஏத்துப்பீங்களா? கழுவி ஊற்றிய மோகன் ஜி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தீபாவளி தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாயை வசூலித்து  மாபெரும் வெற்றி பெற்றது.  

இந்தியாவிலேயே ஹீரோவாக நடித்து முதல் மூன்று படங்களிலும் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த ஹீரோ என்ற பெருமையையும் பிரதீப் ரங்கநாதன் இதன் மூலம் பெற்றுள்ளார். 

ஏற்கனவே வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியின் மூலம் 2கே கிட்ஸ் மத்தியில்  பிரபலமான ஹீரோவாக பிரதீப் மாறினார்.  இதன் காரணமாக டியூட் படமும்  ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே வசூலில் மாஸ் காண்பித்தது.  விமர்சன ரீதியாகவும்  கொண்டாடப்பட்டது. 


இந்தப் படத்தில்  கவின் உயிரிழந்தது பற்றி  இயக்குநர் பேசி இருந்தார்.  அது அண்மையில் உயிரிழந்தத  கவினை நினைவு கூறும் படி இருந்தது.  இந்த வசனம் வெகுவாக கொண்டாடப்பட்டது.  ஆனாலும்  நெகட்டிவ் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில்,  டியூட் படம் தப்பான உதாரணம், அருவருப்பா இருக்கு என டியூட் படத்தைப் பற்றி  மோகன் ஜி என்பவர் விமர்சித்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், டியூட் படத்தில் ஆணவக் கொலை பற்றி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் புது காதலருக்கு பிறந்த குழந்தைக்கு இன்னொருத்தர் இனிஷியல் போட்டு, அவங்க ரெண்டு பேரும் ஒன்னா தங்க அவர் வீட்டிலேயே அனுமதி கொடுப்பதை எல்லாம் பார்க்க அருவருப்பா இருக்கு.

 இப்படி ஒரு விஷயத்தை இயக்குநர் நியாயப்படுத்தி இருப்பது தப்பு. இந்த படம் அடுத்த தலைமுறைக்கு தப்பான உதாரணம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவங்க குடும்பத்துல இப்படி ஒரு விஷயம் நடந்தால் நீங்க ஏத்துப்பீங்களா? என்று தான் கேட்க தோணுது என்றார்.

Advertisement

Advertisement