• Apr 02 2025

பார்த்திபனும் பேய்ப்பட இயக்குனரா? தாங்காது சாமி.. ‘டீன்ஸ்’ டீசர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் கடந்த சில மாதங்களாக ’டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாகவும் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே பார்த்திபன் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த டீசரை நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் 

இந்த படத்தின் டீசரிலிருந்து இது ஒரு திகில் பேய் படம் என்று தெரிகிறது. சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உட்பட பலர் பேய் படங்களை இயக்கிய நிலையில் தற்போது அந்த பட்டியலில் பார்த்திபனும் சேர்ந்து விட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பு வருகின்றனர். 

ஆனால் இது ஒரு ஜனரஞ்சகமான நகைச்சுவை பேய் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க முழுக்க திகில் கதை அம்சம் கொண்ட பேய் படமாக இருப்பதால் ரசிகர்கள் ஒரு வித்தியாசமான பேய் பட அனுபவத்தை இந்த படத்தை பார்ப்பதன் மூலம் உணரலாம் என்று கூறப்படுகிறது 

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார் என்றும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.




Advertisement

Advertisement