• Jan 19 2025

சன் டிவி சீரியலில் கிடைத்த ஹீரோ வாய்ப்பு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிறாரா இவர்?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவருக்கு சன் டிவி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால்,  ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, பாண்டியன் கேரக்டரிலும்,அவரது மனைவி கேரக்டரில் நடிகை நிரோஷாவும் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் ஆகாஷ் பிரேம்குமார், கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஹேமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 



கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 100 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதிரவன் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமாருக்கு சன் டிவி சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து ஆகாஷ் பிரேம்குமார் தரப்பில் விசாரித்த போது சன் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இருந்து ஆகாஷ் விலகுவதாக வெளிவந்த செய்தி வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement