• Jan 19 2025

விஜய் ஒரு காலி பெருங்காய டப்பா.. தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு கூட வாங்க மாட்டார்.. தடா ரஹீம்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட போவதாகவும், அவரது கட்சி கண்டிப்பாக ஆட்சியை பிடித்து விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அரசியல் பார்வையாளர்கள் ’அரசியலுக்கு வந்த இரண்டே வருடங்களில் ஆட்சியை பிடிப்பது, முதலமைச்சர் பதவியில் உட்காருவது என்பது சாத்தியமில்லை என்றும், மக்கள் மத்தியில் தனது கட்சியை அவர் இன்னும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும், குறைந்தது 10 ஆண்டுகள் ஆட்சியை பிடிக்க கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

கிராமங்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, ஒரு புதிய கட்சியை மக்கள் ஏற்று கொள்வது மிகவும் கடினம் என்றும் ரசிகர் மன்ற கூட்டத்தை வைத்து மட்டும் ஒரு நடிகர் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தடா ரஹீம் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் ஒரு காலி பெருங்காய டப்பா என்றும் அவருக்கு மக்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லை என்றும் அவரது ரசிகர்கள் மட்டுமே அவருக்கு ஓட்டு போடுவார்கள் என்றும் அதனால் அவர் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறினார். அதிகபட்சமாக விஜய் 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு 10,000 ஓட்டுக்கள் மட்டுமே வாங்குவார் என்றும், அவர் மட்டுமல்ல எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் ஒவ்வொரு தொகுதியிலும் 5000 முதல் 10 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைக்கும் என்றும் ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும்  கூறியுள்ளார்.

எம்ஜிஆர் தவிர வேறு எந்த நடிகரும் கட்சி ஆரம்பித்து இதுவரை ஆட்சியை பிடித்ததாக தமிழகத்தில் வரலாறு இல்லை என்றும் எம்ஜிஆர் கூட அதற்கு முன்னர் பத்து ஆண்டுகாலம் திமுகவில் அரசியல் செய்து கொண்டிருந்தார் என்றும் எனவே தமிழகத்தில் இனிமேல் நடிகர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.

Advertisement

Advertisement