• Jan 19 2025

கலைஞர் டிவியில் இணைந்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை! எதற்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை பப்ரி கோஷ்.இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்த நிலையில், தற்போது அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

சன் டிவில் பிரபலமாக ஒளிபரப்பான பாண்வர் இல்லம் சீரியல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒளிபரப்பான நிலையில், அது கடந்த அக்டோபர் மாதம் நிறைவைடைந்தது. 


அத்துடன், பாண்டவர் இல்லம் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை தான் பாப்ரி கோஷ். இவர் தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நடிக்கவுள்ளார். இதையறிந்த அவரின்  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் 'கண்ணேதிரே தோன்றினால்' சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த தொடரில், தற்போது நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளார்.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாப்ரி கோஷ், 

'மாளவிகா போன்ற திறமைவாய்ந்தவருடன் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரவிச்சந்திரனுக்கு நன்றி. இந்தத் தொடருக்கான என்னுடைய சிறந்த நடிப்பை நான் வழங்குவேன்' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement