• Jan 18 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற என்ன செய்றாங்க இதான் செய்றாங்க... பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ராதிகா சரத்குமார் கூறிய வார்த்தை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன் அழுத்தமான நடிப்பால் பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ராதிகா.


இவர் படங்கள் நடித்ததை தாண்டி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த சித்தி, அண்ணாமலை, செல்லமே சீரியலை எல்லாம் கொண்டாடாத தாய்மார்களே இல்லை என சொல்லலாம். சன் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்தும் நடித்தும் வந்த ராதிகா இப்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரை தயாரித்து வருகிறார்.

நடிகை சமீபத்தில், வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசும்போது, பிக்பாஸில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள், அது தான் உள்ளது என கூறியுள்ளார். அதோடு இளம் பெண்கள் போனிலேயே மூழ்கி கிடக்காமல் இருக்க வேண்டும் என்றும் அன்பு கட்டளையிட்டுள்ளார் ராதிகா சரத்குமார்.

Advertisement

Advertisement