• Jan 19 2025

உண்மையை போட்டு உடைத்த பாக்கியா.. எழில் எடுத்த முடிவு! பிளவுபட்ட குடும்பம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு, அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று பாக்கியா அனைவர் முன்னிலையிலும் உண்மையை போட்டு உடைக்க  எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.

ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு சோபாவில் இருக்க, கோபி உன்னிடம் இப்ப யாருக்கு கேட்டாங்க என்று சண்டைக்கு போக, நீங்கதான் சொல்ல முடியாமல் தயங்கிட்டு இருக்கீங்களே, எவ்வளவு நேரம் என் பிள்ளைகள் காத்துட்டு இருப்பாங்க என்று பேசுகிறார்.

இதே தொடர்ந்து ஜெனியும், அமிர்தாவும் மேலே சென்று விட , இனியா, செழியன், எழில் முகத்தை பார்க்க முடியாமல் கோபி  தலை குனிந்து நிற்கிறார். முதலில்இனியாவிடம் பேச போக இதுக்குத்தான் அன்னைக்கு காலேஜ்ல படிக்கிறவங்களுக்கு தம்பி தங்கச்சி இருக்கான்னு கேட்டீங்களா என்று கோபப்பட்டு செல்கிறார்.


அடுத்து செழியனும் எழினும் சென்றுவிட ராதிகாவும் ரூமுக்கு சென்று விடுகிறார். ஈஸ்வரி இதுக்கு தான் அப்பவே சொன்னேன் நீ என்னைக்கு என் பேச்சை கேட்டு இருக்கா என்று பேசுகிறார்.

ரூமுக்கு போன செழியன், என் குடும்பத்தை பற்றி தப்பா நினைக்காத என்று ஜெனியிடம் சொல்லிக் கொண்டிருக்க, இதுபோல நாளைக்கு மாலினி கர்ப்பமா இருக்கா என்று வந்து சொல்ல மாட்டா தானே என்று செழியனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு சத்தியமா அப்படியெல்லாம் நடக்காது என்று செழியன் புலம்புகிறார்.

அதன் பின் இனியா ரூமுக்குள் அழுது கொண்டிருக்க பாக்யா அவருக்கு சமாதானம் சொல்லி தூங்க வைக்கிறார். மொட்டை மாடியில் எழில் இருக்க, அங்கு செழியன் ஜெனி பேசிய வார்த்தைகளை சொல்லி புலம்ப, எல்லாம் ஒரு நாள் சரியாகும் ஜெனி உன்னை கண்டிப்பா புரிஞ்சு கொள்ளுவா என்று எழில்  சொல்லுகிறார். 

மேலும் கோபி இங்கே இருக்கிறது சரி வராது. குழந்தை குட்டி வேற, அதனால அவரை வெளியே போக சொல்லி பேசணும் என்று சொல்ல, அதுதான் சரி என்று செழியனும் சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement