• May 15 2025

முத்து வில்லங்கமா கொடுத்த ஐடியா... அசிங்கப்படுத்திய ரோகிணி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து சவாரி ஒன்ரை இறக்கி விடும் போது, சவாரி ஏறிய முதியவரிடம் இரண்டு ரவுடிகள் பிரச்சினை செய்கிறார்கள். அந்த கடைக்கார முதியவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, அவர் தனது கடையை இவர்கள் குறைந்த விலைக்கு தருமாறு தகராறு பண்ணுகிறார்கள் என்று சொல்ல, முத்து அந்த ரவுடிகளை அடித்து விரட்டுகிறார்.

அதன் பிறகு அந்த முதியவரிடம் என்ன விலைக்கு கடையை கொடுக்க போறீங்க? என்னுடைய அண்ணனும் பிசினஸ் தொடங்கப்போறான் என்று சொல்ல, அவர் தனது பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். என்னையும் வர சொல்லுகின்றார்கள். அதனால் இந்த கடையில் நல்ல நபர் ஒருவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி முத்துவுக்கு அவர்களை அழைத்து வருமாறு சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து விஷயத்தை சொல்ல, உடனே விஜயா இவன் மனோஜ்க்கு நல்லது பண்ண மாட்டான் அதனால இதுல எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்ல, ரோகினி கடையை பார்த்துவிட்டு முடிவு பண்ணலாம் என்று சொல்லுகிறார். 

அதன்பின் மீனா முத்துவை அழைத்துக் கொண்டு கிச்சனில் வைத்து உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று பேசுகிறார். அதற்கு அண்ணன் மீது ஒரு பாசம் அத்துடன் அப்பாட காசும் திரும்ப அவன் உழைச்சி தரவேனும் என்று சொல்லுகிறார். 

இதை அடுத்து எல்லோரும் கடைக்குச் செல்கின்றார்கள். அங்கு ஏசி, பிரிட்ஜ், டிவி எல்லாவற்றையும் பார்த்தவுடன் கடை ரொம்ப பெருசா இருக்கு என்று எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள். மனோஜ் அங்கு இருந்து முதலாளியின் நாற்காலியில் உட்காருகின்றார். இதை பார்த்து விஜயாவும் சந்தோஷப்படுகிறார்கள்.

அதன் பிறகு கடையில் முதலாளி விலையைப் பற்றி பேசி முடிவு செய்ய முத்து பேச ஆரம்பிக்கும் போது ரோகிணி நாங்க பார்த்துக் கொள்ளுகின்றோம் என்று முதலாளியுடன் மனோஜ் ரோகிணியும் பேசுகின்றார்கள். இதனால் மீனா முத்துவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement