தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் அத்தனையும் தோல்வியை தழுவிய நிலையில், மலையாள படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வசூலையே முறையடித்துள்ளது மஞ்சும்மெல் பாய்ஸ்.
முதல் வாரத்தில் 50 கோடி வசூலித்த இந்த படம், அடுத்தடுத்த நாட்களில் 100 கோடி வரையில் வசூலில் சாதனை படைத்தது. அது மட்டும் இன்றி மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்பட குழுவினரை கமல்ஹாசன், உதயநிதி போன்ற பிரபலங்களும் நேரில் சந்தித்து பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில், மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதற்கு காரணம், 21 கோடியில் உருவான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை 21 கோடிக்கு விற்பனை செய்ய பேராசை கொண்டுள்ளார்களாம் படக்குழுவினர்.
இந்தப் படத்தை 10.5 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க வந்த போதிலும், அந்த டீலை கைவிட்டு உள்ளார்கள்.
இவ்வாறு நூறு கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள இந்த படத்தை 20 கோடிக்கு மேல ஓடிடியில் வியாபாரம் பார்க்க படக்குழுவினர் ஆசைப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என சினிமா வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதே வேளை, தற்போது நஷ்டத்தை சந்தித்து வரும் ஓடிடி நிறுவனங்கள் குறைந்த விலைக்கு மட்டுமே படங்களை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!