• Apr 17 2026

கோட் படத்திலும் விஜய் சிங்கிங் சாங்- ஆஆ..! யுவன் சொன்ன சீக்ரெட்? வேற லெவலில் உருவாகும் காம்போ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் பெருமளவில் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் வெங்கட் பிரபு இணைந்ததில் இருந்தே, ரசிகர்களுக்கு ஒரு ஆசை இருந்தது. அதாவது விஜயுடன் வெங்கட் பிரபு எப்போது கூட்டணி அமைப்பார் என்று. அதேபோல விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபுவுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்திற்கு The Greatest Of All Time  என பெயர் வைத்துள்ள நிலையில், அதன் படப்பிடிப்புகள் ரஷ்யா, கேரளா, இலங்கை என  ஷெட்யூல் போடப்பட்டு விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அத்துடன் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் கோட் திரைப்படம் ரீமேக்  இல்லாமல் புதிய கதையில் உருவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், The Greatest Of All Time திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

அதன்படி தளபதி விஜய் நடிக்கும் The Greatest Of All Time படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளாராம் விஜய். இதனை இன்று இடம் பெற்ற பெங்களூர் இசை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.

எனவே விஜய் மற்றும் யுவன் காம்போவில் உருவாகும் பாடலுக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement