• Jan 19 2025

சிவகுமார் குடும்பம் பணத்தை ஏமாத்தி ஆட்டைய போட்டாங்க... கார்த்தி வந்தது எனக்கு மட்டும் தான் தெரியும்... அமீர யூஸ் பண்ணுறாங்க கொலவெறி ஆகுது - கஞ்சா கருப்பு பேட்டி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக பிரச்சனை தற்போது இரண்டு வாரகாலமாக  நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அது தொடர்பாக இயக்குனர் அமீர் அவர்கள் கூறியதும் அதற்கு பதில் தயாரிப்பாளர் கானவேல்ராஜா கூறியதும் தற்போது பேசுபொருளாக மாறி இருந்த நிலையில் தற்போது அது தொடர்பாக நடிகர் கஞ்சா கருப்பு பேட்டி கொடுத்துள்ளார்.


ஞானவேல் வேல் ராஜா அவர்கள் அமீர் குறித்து பேசியது சமூகவலை தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சமீபத்தில் மன்னிப்பு கேட்டு இருந்தார். நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 


இந்த பிரச்சினை தொடர்பாக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இவ்வாறு கூறியுள்ளார். அமீர் சாரை ஏமாத்திட்டாங்க அது எனக்கு நல்லா தெரியும். இவருடைய காசை ஏமாற்றி இன்றைக்கு நடிகர் சிவகுமார் ,சூர்யா , கார்த்திக் குடும்பம் ஏமாத்திகிட்டு இருக்கு. பருத்திவீரன் படம் எவ்வளவு பெரிய படம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாக்கு அறிவு இருந்தா  எல்லாரும் கூப்பிட்டு பாராட்டி இருக்கனும். 


பருத்தி வீரன் படத்துல சூர்யாவை தான் முதல்ல கமிட் பண்ணாங்க கார்த்தி தாடி வச்சிட்டு வந்த நாளைத்தான் கார்த்தியை செலக்ட் பண்ணுனாங்க அது எனக்கு மட்டும் தான் தெரியும். நான் ஒரு டேக்ல நடிப்பேன் , கார்த்தி 15 டேக் போகும் அப்ப யாரு காரணம் அந்த டேக் போறதுக்கு கார்த்திதான் காரணம். தப்பு தப்பா எங்க அமீர் அண்ணன யூஸ் பண்ணுறாங்க எனக்கு கொலவெறி ஆகுது என நடிகர் கஞ்சா கருப்பு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement