• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டை வெளியேறப்போவதை இரண்டு நாட்களுக்கு முதலே அறிந்த ஜோவிகா- இப்படியொரு சக்தி இவருக்கு இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்,முதல் வாரத்திலேயே சூடு பிடிக்க ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.,முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரையும் உடல் நல பிரச்சனை காரணமாக தானாகவே வெளியேறினார். 

அதன் பின் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.மேலும் சென்ற வாரம் சரவண விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார்.


60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகாவிற்கு 1 வாரத்திற்கு ரூ. 2 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகின்றது.ஜோவிகா வெளியேறும் முன்பே  எல்லோரிடமும் பேசும்போது தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது தெரியும், எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் கமல் சாருடன் நின்று என் பயண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன்.


அது தான் தற்போது நடந்து இருக்கிறது. நான் ஹாஸ்டலில் இருந்து படிக்கும்போது கூட அம்மாவை பார்க்க போகிறேன் என்றால் எனக்கு முன்பே தெரிந்துவிடும் என்றும் ஜோவிகா கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement