நாட்டில் என்ன நடந்தாலும் இந்த சோசியல் மீடியாவிற்கு விருந்துதான். ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை. எல்லா வற்றிலும் மீம்ஸ் செய்து அலப்பறை செய்வார்கள். அப்படி நாட்டை சூறையாடிய பெங்கல் புயல் ஒரு வழியாக கரையை கடந்து விட்டது ஆனால் மீம்ஸ் புயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் நம் மக்கள் கடலின் சீற்றம் எப்படி இருக்கும் என பார்க்க பிள்ளை குட்டிகளோடு சென்றது தனி கதை. அதையெல்லாம் தாண்டி நியூஸ் சேனல்கள் அதை அப்படியே படம் பிடிக்கிறேன் என கொடையுடன் செய்த காமெடி இப்போது சோஷியல் மீடியாவில் மீம்சாக பரவி வருகிறது.
புயல் வந்தால் கடற்கரையில் காத்து தான் அடிக்கும். பின்ன வீட்டுக்கு வந்து வெள்ளையா அடிக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் இன்றும் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் மக்கள் ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு மட்டன் சிக்கன் வாங்க கடைகளில் குவிந்து விட்டனர் என பல வாரான காமெடிகள் இந்த வாரத்தில் ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Listen News!