விறுவிறுப்பாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9, தற்போது முதல் வாரத்தை முடித்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் பிரமாண்டமாக துவங்கிய இந்த சீசன், ஆரம்பமே நெகிழ்ச்சி, அதிர்ச்சி மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பலருக்கும் இது வாழ்க்கையின் புதிய அனுபவமாகவே காணப்படுகின்றது. ஆனால் சிலருக்கு, அது அவர்களது மனநிலை, உணர்வு மற்றும் வாழ்க்கை நோக்கங்களை ஆழமாக பாதிக்கக்கூடிய சூழ்நிலையாக மாறுகிறது. அப்படிதான் நடந்தது நந்தினி என்பவருக்கும்....
வீட்டில் நடந்த ஒரு சில சம்பவங்களுக்குப் பிறகு, நந்தினி தொடர்ந்து அமைதியாகவும், எதையாவது மனதில் யோசிக்கிற மாதிரியான தோற்றத்திலும் காணப்பட்டார். நாட்கள் செல்ல செல்ல, “இந்த வீட்டில என் மனநிலை சமநிலையில் இல்லை. என்னால இங்க இருக்க முடியல. நான் வெளியே போறேன்...” என பிக்பாஸிடம் நேரடியாக தெரிவித்தார் நந்தினி.
இதற்கமைய, பிக் பாஸ் அனுமதியுடன், அவர் நேற்று வீட்டிலிருந்து வெளியேறினார். இது அனைத்து போட்டியாளர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
நந்தினி தன்னார்வமாக வெளியேறியதால், ரசிகர்களிடையே ஒரு பொதுவான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த வாரம் ஏற்கனவே ஒருவர் வெளியேறியதால், எலிமினேஷன் இருக்காது என்பது. ஆனால் பிக் பாஸ் இதை சாமர்த்தியமாக முறியடித்து, வீட்டில் நடக்கும் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் உண்டு எனத் தெரிவித்தார்.
வீட்டில் போட்டியாளர்களிடையே நடத்தப்பட்ட நாமினேஷன் மற்றும் அதற்கடுத்த ரசிகர்கள் வோட்டிங் மூலம், பிரவீன் காந்தி குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது சிலருக்கு எதிர்பார்த்தது போல இருந்தாலும், பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பிரவீன், பிக் பாஸ் வீட்டில் தனக்கென ஒரு ஸ்டைலையும், கேளிக்கையையும் கொண்டு வந்தவராக இருந்தார். மற்ற போட்டியாளர்களுடன் அவரது உறவுகள் சில நேரங்களில் distance-ஆகவே இருந்தாலும், அவர் நேர்மையான கருத்துகள், சில நேரங்களில் நேரடித்தன்மை கொண்ட அணுகுமுறையால் கவனத்தை பெற்றிருந்தார்.
Listen News!