• Oct 12 2025

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மகளை பார்த்தீர்களா? க்யூட் போட்டோஸ்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி படங்களில் நடித்து  பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.  இவர் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம்  அறிமுகமானார்.  இதை தொடர்ந்து பல  படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். 

அதன்படி  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் பிரபலமடைந்த ரெடின் கிங்ஸ்லி, தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த,  சதீஷ் உடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவை காதலித்து திருமணம் செய்தார்.  அதன் பின்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 

இந்த நிலையில், நடிகர் ரெடின் கிங்ஸ்லி தம்பதியினர் தனது மகளுடைய ஆறு மாத நிறைவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்களை தமது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.  இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement