• Nov 23 2025

சுயமரியாதை இல்லை - பாதியில் வெளியேறிய VJ பார்வதி ? சகுனி ஆட்டத்தை ஆரம்பித்த வியானா..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன்,  

இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்‌ஷா,   துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து  போட்டியாளர்களுக்குள்  சண்டை நிலவி வருகின்றது.  அதிலும் திவாகரை குறி வைத்து சக போட்டியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். 


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் Deluxe Roomஇல் சுயமரியாதை இல்லாத காரணத்தால் பாதியில் வெளிநடப்பு செய்துள்ளார் வி.ஜே.பார்வதி.

பிக்பாஸ் வீடு தற்போது இரண்டு வீடாக பிரிந்துள்ளது. அதில் Deluxe Roomஇல் பார்வதி வேலை செய்யும்  விதத்தை வைத்து வியானா வம்பு இழுத்துள்ளார்.

ஆனாலும் பார்வதி, நான் எப்படி வேலை செய்யணும் என்று நீங்க சொல்லக் கூடாது என்று சொல்ல, இதுக்கு அப்புறம் நீங்க பெருக்கும் போது எங்க வோல்ல இப்படி பண்ணாதீங்க, எங்களுக்கு என்று சுயமரியாதை இருக்கு என்று ரம்யாவும் குரல் கொடுக்கிறார்.

இதனால் எனக்கும் சுயமரியாதை இருக்கு, வியானா என்ன வேலை வாங்கின விதம் எனக்கு பிடிக்கல. நான் ரிஸைன் பண்ணுறேன் என பார்வதி கிளம்பிச் சென்றுள்ளார். 


Advertisement

Advertisement