• Jan 13 2026

கவின் - நயன்தாரா லவ் ட்ராக் ஒர்க் அவுட் ஆகுமா? சுடச்சுட அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா.  இவர் திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும்  சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். அதேபோல  வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத் திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், 'நட்புனா என்ன தெரியுமா' படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.  

அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது அவருடைய கேரியரில்  மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அந்த சீசனில் கவின் வெற்றி பெறா விட்டாலும் பணப்பெட்டியுடன் வெளியேறி இருந்தார். 

இதைத் தொடர்ந்து  லிப்ட் படத்தில் நடித்தார்.  தொடர்ந்து ஸ்டார், கிஷ், டாடா, ப்ளடி பக்கர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வயதில்  சிறியவனாக இருக்கும் கவின்,  தன்னைவிட வயது கூடிய பெண்ணான நயன்தாரா மீது காதலில் விழுகின்றார், இவ்வாறான  கதைக் களத்திலேயே இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா  நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.   இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 


Advertisement

Advertisement