தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ‘Genie’ படத்தின் முதல் பாடல் ‘ABDI ABDI’ இன்று grand-ஆக வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த பாடல், அசத்தலான வரிகளுடன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘Genie’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுனன். இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு பிரம்மாண்டமான படமாக உருவாகி வருவதாகவே கூறப்பட்டு வருகிறது.

இப்படத்தில் முக்கிய வேடங்களில், ரவி மோகன், கல்யாணி பிரியதர்சன் மற்றும் க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது வெளியான வீடியோ யூடியூபில் அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!