தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான போது, அது இந்திய சினிமா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரிய அளவில் பேசப்பட்டது.
அந்த வெற்றியின் பின்னர், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் தான் “ஜெயிலர்–2”. இந்த படத்தை மீண்டும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார் என்பதை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஜெயிலர்–2 குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இணைக்கப்படுகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
மோகன்லால், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்களைத் தொடர்ந்து, தற்போது ஷாருக் கான் கூட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் ‘ஜவான்’, ‘பதான்’ போன்ற படங்களின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் கிங் ஆகவுள்ள ஷாருக் கான், தற்போது தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளார்.
ஜெயிலர்–2 படக்குழு இதை ரகசியமாக வைத்திருந்தாலும், இப்போது தகவல் வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ரஜினிகாந்த்–ஷாருக் கான் காம்பினேஷனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்த இணைவு பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்ட் அடிக்கும் தருணமாக கருதப்படுகிறது.
Listen News!