தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கதைகளால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வரும் இயக்குநராக விளங்குகிறார் நலன் குமாரசாமி. இவர் இந்த முறை நடிகர் கார்த்தியுடன் இணைந்து “வா வாத்தியார்” திரைப்படத்தினை உருவாக்கி வருகின்றார்.

தொடக்க அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் குறித்து தற்பொழுது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்பொழுது வெளியான அறிவிப்பின்படி, “வா வாத்தியார்” திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதென படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் #VaVaathiyar ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
இந்தப் படத்தில் க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடித்து உள்ளார். தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமான க்ரித்தி, இப்போது கார்த்தியுடன் இணையும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த ஜோடியின் நடிப்பைத் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!