• Dec 03 2025

கார் பந்தயத்தில் ஜெயிக்க அஜித் செய்த அசத்தலான காரியம்.. இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்.!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றித் திலகமாக விளங்கும் அஜித் நடிகராக மட்டுமல்லாமல், கார் பந்தயத்திலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தும் வருகிறார். அவரின் நடிப்பு திறன், ஆக்ஷன் காட்சிகள், ஹீரோயிசம் போன்றவை ரசிகர்களை மயக்கும் வகையில் உள்ளது. ஆனால், நடிகராக மட்டும் அல்ல; அஜித் கார் பந்தயங்களில் (Car Racing) கூட தனித்துவமான பெயராக இருக்கிறார்.


ஒரு நடிகராக எந்த அளவிற்கு பிஸியாக இருந்தாலும், அதே அளவிற்கு அவர் கார் பந்தயங்களிலும் செம பிஸியாக இருப்பார். தமிழ் திரை உலகிலும், இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் அதிகளவான ரசிகர்களைக் கொண்டுள்ளார். 

அஜித் தற்போது மலேசியா சென்றுள்ளார். அங்கு நடைபெறவுள்ள 24H Series International Car Race போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி உலகத்தரம் வாய்ந்த endurance racing ஆகும். இதில், உலகம் முழுவதும் இருந்து சிறந்த ரேசர்கள் பங்கேற்கின்றனர். 


இந்த உலக தரத்திலான போட்டியில் அஜித் கலந்து கொள்ளும் செய்தி, ரசிகர்களுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 


போட்டி தொடங்குவதற்கு முன், அஜித் மலேசியாவில் உள்ள பிரபலமான பத்து மலை முருகன் கோயிலுக்குச்  சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்து, தனது வெற்றி மற்றும் பாதுகாப்புக்காக வேண்டிக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement