• Aug 15 2025

நயன்தாராவின்'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' டீசர் வெளியீடு இன்று..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

luxshi / 1 hour ago

Advertisement

Listen News!

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' படத்தின் டீசர் இன்றையதினம்  மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'லவ் ஆக்சன் ட்ராமா'. இந்தப் படத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளனர். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.

நிவின் பாலி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 


படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ‘டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இப்படம் பாடசாலையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையை  வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

இதற்கு முன்னதாக  'பிரேமம்' கல்லூரி காதல் கதையை அடிப்படையாக கொண்டு நிவின் பாலி - சாய் பல்லவி நடிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நிவின் பாலி,  நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் அதனை பார்வையிட ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement