• Sep 04 2025

தாறுமாறாக ஒர்க்அவுட் பண்ணும் ரஜினிகாந்த்..! லீக்கான வீடியோ லிங்க் இதோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 74 வயதை கடந்த போதும் உச்ச நடிகராக திகழ்ந்து வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக கூலி திரைப்படம் நேற்றைய தினம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம், லியோ திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதில் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் என்பதோடு அதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன்  ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள் என்பது தான் இந்தப் படத்தின் ஹைலைட்.


இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 65 கோடிகளை இந்திய அளவில் வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.  ஆனாலும் கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்துள்ளது.  இந்த படத்தின் திரைக்கதை வழமையான பழிவாங்கல் கதையை கொண்டுள்ளதாகவும் இதில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், எனர்ஜியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும்  படத்தை பார்த்தவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.  அதில் சூப்பர் ஸ்டார் ஒர்க்அவுட் பண்ணுகின்றார்.  உடம்ப நாம தண்டிக்கல என்றால் உடம்பு நம்மல தண்டிச்சுடும் என்று சூப்பர் ஸ்டாரின் வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement