• Sep 05 2025

லோகேஷை மட்டம்தட்டிய நெட்டிசன்கள்.. ஆதிக் ரவிசந்திரன் தான் காரணமா? அம்பலமான உண்மை

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் மற்றும் அஜித் ஆகியோர்  முன்னணி நடிகர்களாக தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர். அதிலும் தற்போது விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் சூர்யா நடித்த  கங்குவா,  ரெட்ரோ  மற்றும்  விஜய் நடிப்பில் வெளியான கோட் ,  அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி ஆகிய திரைப்படங்கள்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை  முழுமையாகபூர்த்தி செய்யவில்லை.  அதற்கு முக்கிய காரணம் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படம் மீது அதிக அளவிற்கு நம்பிக்கை கொடுக்கப்பட்டது தான்.

அதிலும் குறிப்பாக கங்குவா திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றும்  கோட் திரைப்படத்தில் எக்கச்சக்கமான டெக்னாலஜிகள் கையாளப்பட்டிருப்பதாகவும், அதில் விஜய்யை மிகவும் இளமையாக காட்டியிருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அத்தனையும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


எனினும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தது.  இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிய காரணத்தினால் இந்தப் படம் மீதும் அதிகளவு எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் திரைக்கதையும் வழமை போல பழிவாங்கல் கதையை மையமாக கொண்டதால் இதில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை என ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.


இந்த நிலையிலேயே தற்போது லோகேஷ் கனகராஜை விட ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த இயக்குனர் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றார்கள். 

அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் தம் இல்லை, சரக்கு இல்லை மற்ற ஹீரோக்களின் கேமியா ரோல் இல்லை, அஜித் படங்கள் ஓட ரெபெரென்ஸ் வச்சி பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை மாஸ் காட்டி பக்கா தியேட்டர் அனுபவம் கொடுத்துள்ளார் என்று ஆதிக்கை தற்போது பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement