• Apr 17 2026

பொங்கலுக்கு புது சீரியல் ரிலீஸ்..? ஜீ தமிழில் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் விஜய் டிவி , சன் டிவிக்கு  போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியும்  காணப்படுகின்றது.  இந்த சேனல்களில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களும் சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில்  ஜீ தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக  அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை நெருங்கி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாம்.  தற்போது அந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அண்ணா சீரியல் இதுவரையில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில் நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கின்றார். 


இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.  அண்ணன் தங்கைகளுக்கு இடையிலான  பந்த பாசத்தை  கதைக்களமாகக் கொண்டு இந்த சீரியல்  எடுக்கப்பட்டது .

தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு பதிலாக  வாகை சூடவா என்ற புத்தம் புது சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் இதற்கான ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


Advertisement

Advertisement