• Jan 19 2025

சினிமா துறைக்காக தனது லட்சிய கனவை இழந்த நயன்தாரா! உருக்கமான பேட்டி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அவருடைய இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 

தற்போது வரையில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகால பயணத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர காரணம் அவரது கடின உழைப்பு தான்.

கேரளாவில் பிறந்த நயந்தாரா, அவருடைய உறவினர் மூலமாக நயன்தாராவின் புகைப்படம் சில தயாரிப்பாளர்களிடம் சென்று அவர்கள் நயன்தாராவிற்கு திரைப்பட வாய்ப்புகளை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாகவே மலையாள மொழியில் ஒளிபரப்பான சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.


இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா, தான் ஒரு நாளும் சினிமா துறையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைவேன் என்று துளியும் எண்ணியதில்லை என்று தனது இலட்சிய கனவு குறித்து பேசி உள்ளார்.

அதாவது பிகாம் பட்டதாரியான நடிகை நயன்தாரா,  CA எனப்படும் chartered accountant  படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.

அவர் சினிமாவில் நடிக்காமல் போயிருந்தால் சில நேரம் நிச்சயமாக ஒரு ஆடிட்டராக இருந்திருப்பார் என்றும் அவருடைய உறவினர்கள் சொல்லுவார்களாம். திரைத்துறைக்காக தனது சிஏ கனவை தவிர்த்து இன்று மாபெரும் நடிகை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement