• Jan 18 2025

பாலியல் தொல்லை கொடுத்தாரா நடிகர் ஜான் விஜய்? பிரபல பாடகி அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜான் விஜய் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் புகார் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். கடந்த 2006 ஆம் ஆண்டு ’தலைமகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’, ’சிங்கப்பூர் சலூன்’ ’வித்தைக்காரன்’ ’பார்ட்னர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் ’சார்பாட்ட பரம்பரை’ படத்தில் டாடி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் ஒருவர் ஜான் விஜய் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சின்மயிக்கு மெசேஜ் அனுப்பி இருந்த நிலையில்,அந்த மெசேஜை தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி அம்பலப்படுத்தி உள்ளார்.


அதில் நடிகர் ஜான்விஜய் சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு ரெகுலராக வருபவர், அங்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பார். பெண்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பின்னாடியே செல்வார், நோ என்று பெண்கள் மறுத்தாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், தான் ஒரு செலிபிரிட்டி என்பதால் அனைவரும் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார். அவருடன் பேச எந்த பெண்ணும் விருப்பம் காட்டவில்லை என்றாலும் அவருடைய தொல்லை நீடிக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து ஜான் விஜய்க்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் இது குறித்து ஜான் விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement