• Jan 18 2025

உயிர் உலகத்தோடு தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிய நயன்... இணையத்தில் வைரலாகும் கேக் கட்டிங் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நேற்றைய தினம் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். உயிர் உலகத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய அந்த வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நயனுக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது. இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதனால் சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். பின் அதையெல்லாம் சமாளித்து தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.


நயன்தாரா ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் குடும்பம் என அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகை நயன்தாராவின் 39வது பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறினார்கள்.


நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் தனது இரட்டை குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் நயன். பிறந்தநாள் கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement