• Apr 15 2026

முத்து வேலை இல்லாமல் இருப்பதை வீட்டில் போட்டுக் கொடுத்த ரோகினி- அண்ணாமலை எடுத்த முடிவு- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் முத்து வேலை இல்லாமல் இருக்கும் விஷயத்தை ரோகினி வீட்டில் வந்து எல்லோருக்கும் சொன்னதால் மனோஜ் முத்துவை பாரில் வேலைக்கு போய் சேரு அது தான் உனக்கு கரெக்டாக இருக்கும் என்று திட்டுகின்றார்.

அப்போது மீனா அவர் ஒன்றும் வேலை இல்லை என்று சும்மா இருக்கல அப்பாட்மென்ட்ல கார் துடைக்கிற வேலைல சேர்ந்திருக்காரு என்று முத்துவுக்காக பேச அண்ணாமலை விஜயாவிடம் வீட்டுப் பத்திரத்தைக் கேட்கின்றார்.

மறுநாள் முத்துவிடம் அவரது காரை மீட்டுக் கொடுத்து என்னோட முத்து எப்பவும் கெத்தாக இருக்க வேண்டும் என்கின்றார்.அதற்கு முத்து நன்றி சொல்ல, எனக்கு எதுக்கு சொல்லுற மீனாவுக்கு நன்றி சொல்லு என்கின்றார். முத்துவின் கார் திரும்ப கிடைத்த சந்தோசத்தில் மீனாவும் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement