• Jan 19 2025

ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்! த்ரிஷாவுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கிய லோகேஷ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷா, தன்னை காணொளி ஒன்றின் மூலம் மிகவும் கேவலமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, சினிமா நட்சத்திரங்களை பற்றி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் மன்சூர் அலிகானை பற்றி முன்னணி நடிகையான த்ரிஷா திடீர் என சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.


இந்நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எல்லாரும் ஒரே டீமா வேலை பார்த்த நிலையில், திரிஷா குறித்து மிஸ்டர் மன்சூர் அலி கான் இப்படி பேசியது ரொம்பவே வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மன்சூர் அலி கானின் இந்த மோசமான பேச்சை நான் கண்டிக்கிறேன்' எனக்கூறி திரிஷாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement