• Jan 19 2025

ஒரு படத்தில் நடிக்கும் சம்பளத்தை 50 வினாடிக்கு கேட்கும் நயன்.. ஆனாலும் குவியும் வாய்ப்புகள்..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும்,  அதிக சம்பளம் வாங்கும் முக்கிய  நடிகையாகவும் காணப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் நயன்தாரா.

நயன்தாரா மலையாள நடிகையாக இருந்தாலும் இவரின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது தமிழ் சினிமா தான். இவர் நடித்த முதல் படமான 'ஐயா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து அதிலும் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து விஜய் உடன் வில்லு, அஜித்துடன் பில்லா, சிம்புவுடன் வல்லவன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அத்துடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கிக்கொண்டார்.


அதன்படி சிம்பு, பிரபு தேவா ஆகிய நடிகர்கள் உடன் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ஆனாலும் அவர்களை திடீர் பிரேக்கப் செய்து பிரிந்தார்.

இவ்வாறு காதல் தோல்வியில் துவண்டு இருந்த நயன்தாரா 2015 ஆம் ஆண்டு 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு அவரை ஆறு வருடத்திற்கு மேல் உருகி உருகி காதலித்தார்.

அதன் பின் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான நான்கு மாதத்திலேயே வாடகை தாய் மூலம் ரெட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா.


கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 1200 கோடியை வசூலித்த நிலையில், அதற்காக நயன்தாரா ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தியுள்ளார். தன்னைத் தேடி வரும் விளம்பரங்களுக்கும் ஐந்து கோடி சம்பளம் வேண்டும் என கேட்கிறாராம்.

50 வினாடிகள் இவர் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜூஸ் நிறுவனத்தின் விளம்பரம் என்பவற்றுக்கு 5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நிமிடம் கூட வராத விளம்பரங்களுக்கு இத்தனை கோடி சம்பளமா என நயனை பார்த்து வாய் பிளந்துள்ளார்கள் சக நடிகைகள்.

Advertisement

Advertisement