• Jan 18 2025

ரூ.5 கோடி கொடுத்தும் ஆட மறுத்த த்ரிஷா .. விஜய் படத்திற்கு மட்டும் ப்ரீயா டான்ஸ் ஆட முடிவு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா வாய்ப்புகளே இல்லை என்றாலும் அவர் ஒரு பாடலுக்கு நடனமாட பலமுறை மறுத்துள்ளார் என்பதும் கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்தால் கூட ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியானஜவான்திரைப்படத்தில் கூட ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷா அழைக்கப்பட்டார் என்றும், 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறப்பட்டதாக போதிலும் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவது இல்லை என்ற கொள்கை முடிவில் அவர் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும்கோட்திரைப்படத்தில் மட்டும் ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாட அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு காரணம் விஜய் என்ற ஒன்றே ஒன்று மட்டும் தான் என்றும் அது மட்டும் இன்றி இந்த படத்தில் நடனமாட அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது..



விஜய் படத்தில் டான்ஸ் ஆட அழைப்பு விடுத்தால் என்னால் மறக்க முடியாது என்றும் சம்பளமே வாங்காமல் நடிக்க தயார் என்றும் அவர் வெங்கட் பிரபு அழைத்தபோது கூறியதாகவும் அதேபோல் அவருக்கு ஒரு கணிசமான சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முன்வந்தபோது கூட வேண்டாம் என்று த்ரிஷா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷா இடையே ஒரு சில வதந்திகள் இருந்து வந்தாலும் விஜய் மீது அவருக்கு இருக்கும் மரியாதை தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்திரைப்படத்திற்கு முன் பத்து ஆண்டுகள் த்ரிஷாவுக்கு வெற்றி படமே கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் விஜய் படம் என்பதற்காக அவர் நான்கு நாட்கள் வந்து டான்ஸ் ஆடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement