• Nov 23 2025

சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா.? முழுவிபரம் இதோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்த உலகம் இன்னும் நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்கும் சில மனிதர்கள் இவ்வுலகில் காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகர் பிளாக் பாண்டி. திரைத்துறையில் தனது தனிச்சிறப்பான நடிப்பால் பிரபலமடைந்த பிளாக் பாண்டி, மற்றொரு அடையாளத்தைப் பலருக்கும் தெரியாமலே செய்து வருகிறார். அது வேறெதுவும் இல்லை சமூக சேவை தான்.!


பல்வேறு படங்களில், காமெடியனாக, சப்போர்டிங் ரோலாக நடித்தவர் பிளாக் பாண்டி. ஆனால், திரைக்கு வெளியில் அவர் ஆரம்பித்துள்ள ஒரு அமைப்பு பலருக்கும் வாழ்க்கை அளிக்கும் வெளிச்சமாக மாறியுள்ளது. அந்த அமைப்பின் பெயர் "உதவும் மனிதன்" அறக்கட்டளை.

இது வெறும் பெயருக்காக மட்டுமல்ல, உண்மையில் உதவி செய்யும் செயல்கள் நிரம்பிய அமைப்பு. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை, ஏழை மாணவர்கள், பணமின்றி கல்வியை முடிக்க முடியாமல் இருக்கும் நபர்கள் ஆகியோருக்கு உதவிகளை செய்து வருகிறது.


இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கல்வியை முடித்துள்ளனர். அத்துடன், பல ஆண்டுகளாக தான் செய்யும் உதவிகளை பெரிதாக விளம்பரப்படுத்தாமல் நடிகர் பிளாக் பாண்டி செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement