• Jan 19 2025

மனோஜ்க்கு செக்மெட் வைத்த முத்து.. மீனா கேட்ட கேள்வியில் ஆடிப்போன முத்து!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா சமைத்துவிட்டு எல்லாரையும் சாப்பிடுவதற்காக கூப்பிட, அங்கு வந்த விஜயா மனோஜ்ஜ கூப்பிட்டியா என்று கேட்கிறார். அதற்கு கூப்பிட்டேன் என்று சொல்ல, சாப்பாடு வச்ச பிறகு கூப்பிட்டியா என கேட்க, மீனா  அவர்களை கூப்பிட போகிறார்.  உடனே முத்து மீனாவை சாப்பிடுமாறு அமர வைக்க,   அப்ப யாரு சாப்பாடு பரிமாறுவது என்று விஜயா கேட்க, அவங்க அவங்களுக்கு கை  இருக்கு அவங்களே போட்டு சாப்பிடட்டும் என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

இதையடுத்து சாப்பிடும் போதும் மனோஜ், பிசினஸுக்கு பெயர் வைப்பதற்கான பேச்சு நடக்கிறது. இதன் போது மீனா பாட்டியின் பெயர் வச்சா நல்லா இருக்கும் என்று சொல்ல, விஜயா உன்கிட்ட  யாரும் கேட்டாங்களா என்று, தனது பெயரை வைப்பாங்கள் என்று நினைக்கின்றார். ஆனாலும் மனோஜ் தான் நல்ல பெயர் யோசிக்க வேண்டும் என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. இதனை முத்து கவனிக்கிறார்.

இதைத் தொடர்ந்து மனோஜ், ரோகிணியும் ரூமில் பேசிக்கொண்டிருக்க, அங்கு முத்து செல்லும் போது, விஜயா பற்றி மனோஜ், அம்மாவின் பெயர் ராசி இல்லை என்று கூறியதை போனில் ரெகார்ட் பண்ணுகிறார். இதைத் தொடர்ந்து நான் ஐடியா தாரேன் என்று ரூமுக்கு வந்த முத்து, நீ அம்மா பெயரைத்தான் வைக்க வேண்டும் இல்லை என்றால் இந்த ரெக்கோட்டை காட்டுவேன் என்று சொல்லுகிறார்.


இவ்வாறு பேசிவிட்டு முத்து வெளியே வர, மீனா உங்களை புரிந்து கொள்ளவே முடியல. அத்தை என்ன சொன்னாலும் நீங்க அவங்க மேல பாசமா இருக்கீங்க. அத்தை உங்க மேல எறிஞ்சு எறிஞ்சு விழ என்ன அப்படி என்னதான் பிரச்சனை நடந்துச்சு என்று கேட்க, சில விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்று பிளாஷ்பேக்கை சொல்ல வர, அதனை சொல்லாமல் காபி கொண்டு வருமாறு மழுப்புகிறார்.

அதன்பின் ஸ்ருதி ரூமில் ரவியின் டீ சர்ட் மற்றும் லுங்கியை கட்டிக்கொண்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க உள்ளே வந்த ரவி அதை பார்த்து ஷாக் ஆகிறார். 

இதனை கழட்ட சொல்ல, முடியாது என்று தனது நைட்டியை போடுமாறு ரவிக்கு சொல்லுகிறார். அப்போ தான் என் மேல லவ் இருக்கு என்று சொல்லி மடக்குகிறார். மேலும் அப்படியே போய் தனக்கு டீ போட்டு வருமாறும் சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement