• Jan 19 2025

ராசய்யா "இளையராஜா" ஆகி இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவு .

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

14 மே 1976 ஆம் திகதி  தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் திரையிசை துறைக்கு அறிமுகமானார் இளையராஜா .இன்றுடன் இளையராஜாவின் திரையிசை பயணத்தின் 48 ஆண்டு பூர்த்தி அன்னக்கிளிக்கு வயது 48 என திரைத்துறையில் கொண்டாடப்படுகிறது.


இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.  இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது.குறிப்பாக எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் மச்சானை பாத்திகளா பாடல் இன்று வரை தலைமுறைகள் கடந்து சிலிர்ப்பூட்டும் பாடலாக இருக்கிறது.


"மச்சான பார்த்தீங்களா" பாடல், இளையராஜா மற்றும் அவரது இசைக்குழுவினரால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பே ஒரு திருமணத்தில் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டது.இப் படத்திற்கான பாடல் வரிகளை எழுதிய பஞ்சு அருணாசலம் ராசய்யா என்ற பெயர் கொண்டவரை திரைத்துறை போட்டியின் காரணத்தால் "இளையராஜா" என்று பெயரிட்டார், ஏனெனில் 1970 களில் மேலும் ஒரு இசை அமைப்பாளர் ஏ.எம்.ராஜா பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement