• Jul 27 2024

ஹீரோயின் இல்லாத ரஜினி படம்.. ‘கைதி’ பாணியில் சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல் இருந்த நிலையில் அதேபோல் தான் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்திலும் ஹீரோயின் இல்லை என்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை படம் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வந்தாலும் அவை எதுவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது என்பதும் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிப்பதையும் இன்னும் பட குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ‘கைதி’ படம் போடவே இந்த படத்திலும் ஹீரோயின் இல்லை என்றும் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படமாக ஆரம்ப முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் வகையில் லோகேஷ் கனகராஜ் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இணைந்தாலும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஒரு சின்ன கேரக்டரில் தான் நடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

’கைதி’ பாணியில் ஹீரோயின் இல்லாமல் உருவாக்கப்படும் இந்த படத்தில் ’கைதி’ போலவே பாடல்களும் இல்லாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement