கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார பரப்புரை பணியில் ஈடுபட்டுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இதன் மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்து நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அதில் ஒன்பது குழந்தைகள் உட்பட 41 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காமெடி நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் கூறுகையில், சினிமா பாக்குறீங்களா? பாத்துட்டு ஜாலியா இருந்துட்டு போங்க.. அதை விட்டுட்டு அஜித் பெருசா? விஜய் பெருசா? கமல் பெருசா? ரஜினி பெருசா? என்று சண்டை போட்டு வீட்டுல சோத்துக்கு வழி இல்லாமல் போகாதீங்க..
முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கும் சப்போர்ட் பண்ணுவேன். பிரதமர் மோடி அவர்களுக்கும் சப்போர்ட் பண்ணுவன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் சப்போர்ட் பண்ணுவேன். விஜய் சாருக்கும் சப்போர்ட் பண்ணுவேன் காரணம் நான் சினிமாக்காரன்.
இந்தப் பக்கமும் ஜால்ரா அடிப்பேன். அந்தப் பக்கமும் ஜால்ரா அடிப்பேன். நீ சான்ஸ் கொடுத்தா சினிமால ஜால்ரா அடிப்பேன்.. அதே சீட் கொடுத்தால் அரசியலில் ஜால்ரா அடிப்பேன் இதை நான் ஓப்பனா சொல்றேன் என்று சொல்லியுள்ளார்.
Listen News!