1975 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகின்றார்.

உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விருதை வாங்குவதற்காக தனது மொத்த குடும்பத்துடனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றுள்ளார். இதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அதில் ரஜினியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மனைவி என அனைவரும் காணப்படுகின்றார்கள். அனைவரையும் ஒன்றாக பார்க்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக காணப்படுகிறது.
ஆனால்அதில் ஐஸ்வர்யாவின் முன்னாள் கணவரும் நடிகருமான தனுஷ் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்
Listen News!