தமிழ்த் திரையுலகில் தற்போது அதிகம் பேசப்படும் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்வது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 173”. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், ஆரம்ப அறிவிப்பிலிருந்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இந்த படத்தைச் சுற்றி புதிய தகவல்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவரான சாய்பல்லவி, தனது நடிப்பு, உணர்ச்சிபூர்வமான டான்ஸ் என்பன மூலம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்தியாவில் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், “தலைவர் 173” படத்தில் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மையாக இருந்தால் ரஜினிகாந்துடன் அவர் நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சாய்பல்லவிக்கு இந்த கேரக்டருக்காக ரூ.15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, அதனால் ரசிகர்கள் இது உண்மையா.? என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!