• Dec 02 2025

சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்காத ராஜகுமாரன்... "கூலி" டைட்டிலை வைச்சிருக்க கூடாது.!!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “கூலி” படம், ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. 


இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் ராஜகுமாரன் இதன் தலைப்பைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்துள்ளார். “ரஜினி சார் படத்துக்கு 'கூலி' என்ற பெயர் வைச்சிருக்காங்க. அது ஒரு தவறான டைட்டில். ஒருத்தனுக்கு படம் பிடிக்கவில்லை என்றால், அந்தப் படத்தின் பெயரை வேற மாதிரி சொல்லுவான். அப்படி சொல்ல விடக் கூடாது. 


விக்ரமன் சார் பட பெயரைப் பாருங்க... என்ர பட டைட்டிலைப் பாருங்க. அதெல்லாம் ஆராஞ்சு வைச்சோம். நம்ம படத்தோட டைட்டில் கேலி செய்ய கூடாதுனு யோசிச்சுத் தான் வைக்கணும்.” என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement