தமிழ் சினிமா உலகில் தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜித். அவரின் நடிப்பு, தனித்துவமான தோற்றம் என்பன ரசிகர்களை மட்டுமல்ல, திரைப்பட விமர்சகர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

சமீபத்திய நேர்காணல்களில், திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா அவரைப் பற்றி மனம் திறந்து கதைத்துள்ளார். அந்த நேர்காணலில் அவர், “அஜித்குமாருடனான நேர்காணலின் போது அவருக்கு உதவியாளர் என யாரும் இல்லை.
எனக்கென ஒரு ஒப்பனைக் கலைஞர் இருந்தார். ஆனால், அவர் மேக்-அப் கூட செய்து கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு கதவை திறந்து விடுகிறார். அவரின் எளிமையைக் கண்டு கூச்சப்பட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணல், அஜித்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சினிமா உலகில் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஆடம்பரமாகவே காணப்படுவர். ஆனால் அஜித், அந்த நடைமுறையை பின்பற்றாமல், எளிமையான முறையில் நடந்து கொள்வது அனுபமா சோப்ராவை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Listen News!