தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இவரது புதிய வளர்ச்சிக்குப் பாராட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னணி நடிகர் கார்த்திக் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் கூறியதாவது, "தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும். நல்லா வரட்டும். சரியான நேரத்தில் தான் அரசியல் வந்திருக்கிறார். சினிமாவிலும் உச்சத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் அரசியலிலும் வருகிறார். நல்லது செய்யட்டும். ஆனால், ஒரு அண்ணனாக நான் சொல்லுற விஷயம் என்னன்னா… அரசியலுக்காக சினிமாவை விட்டுவிடக் கூடாது. தொடர்ந்து நடிக்கணும்." என்றார்.
கார்த்திக் இதன் மூலம், விஜயின் அரசியல் பிரவேசத்தை உற்சாகத்துடன் ஆதரிக்கிறார் என்பதையும், அவருடைய சினிமா பயணத்தை தொடர்வது முக்கியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் விஜயின் வலுவான நிலையை உருவாக்கியுள்ளார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி வருகிறது. குறிப்பாக, விஜய் அரசியலுக்கு வரும் நேரம் மற்றும் சினிமாவில் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு புதிய பார்வையைக் கொடுத்துள்ளது கார்த்திக்கின் உரை.
Listen News!