தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் ரவி மோகன், கடந்த ஆண்டு தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்து இருந்தாலும் அவர்களுடைய விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் தான் காணப்படுகின்றது.
ரவி மோகனின் மனைவி ஆர்த்தி திரைப்படங்களில் நடிக்காவிடினும் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றார். அவருடைய போட்டோக்கள், பதிவுகள் என்பன கூடுதலான லைக், கமெண்ட்ஸை அள்ளும். அதிலும் ரவியின் பிரிவுக்குப் பின்பு அவர் கூடுதலாக கவனிக்கப்பட்டு வருகிறார்.
ரவி மோகன் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தபோதும் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக தான் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இவர்களுடைய பிரிவுக்கு காரணம் கெனிஷா என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் மாதத்தை வரவேற்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தாலும், அதில் உள்ள ஒருவரி மறைமுகமாக ரவி மோகனை அட்டாக் செய்வது போல காணப்படுகின்றது.
அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், டிசம்பர் மாதம் குழப்பத்தை நிறுத்துங்கள், மன அழுத்தத்தை நீக்குங்கள், உங்களை மதிக்காதவர்களை நீக்குங்கள், உங்கள் மீது கனிவாக இருங்கள், டிசம்பர் உங்களை ஆச்சரியப்படுத்தக் கூடும் என்று பதிவிட்டுள்ளார்.
அதில் உங்களை மதிக்காதவர்களை வாழ்க்கையில் இருந்து நீக்கி விடுங்கள் என்று ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்வது போல பதிவிட்டுள்ளார். தற்போது இது பற்றி பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!