யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமான சமையல் கலைஞராக உருவெடுத்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பல cooking shows, celebrity events மூலம் அவர் தொடர்ந்து பிரபலமாகி வந்தார். ரசிகர்களிடையே நல்லவராகவும் எளிமையானவராகவும் அறியப்பட்ட இவர், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

இவர் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பெரிய விவாதமாக மாறியுள்ளது.
ஆடை வடிவமைப்பாளராக பிரபலமான ஜாய் கிரிசில்டா, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை “திருமணம் செய்து ஏமாற்றினார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி, ரங்கராஜ் ரசிகர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், மாதம்பட்டி ஜாஸ்தி ‘Love u’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோவை வெளியிட்ட ஜாய், " ஜாஸ்தி 'Love u"னு சொல்லிட்டு எங்க ஓடி போனாரு தெரியலையே.." என்ற பதிவினையும் வெளியிட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!