தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் சமந்தா இரண்டாவதாக பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் நேற்றைய தினம் கோயம்பத்தூர் ஈஷா யோகா மையத்தில் மிக எளிமையாக நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
`தி ஃபேமிலி மேன் 2` வெப் தொடரில் சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் பணியாற்றிய போதே அவர்களுக்கு இடையிலான பழக்கம் காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. சமந்தா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அதேபோல ராஜ் நிடிமோருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில், சமந்தாவுக்கு ஸ்பெஷல் திருமணம் நடைபெற்று உள்ளது. அதாவது ஈஷா மையத்தில் பூத சுத்தி முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இதுவே இந்த திருமணத்தின் சிறப்பாக காணப்படுகிறது.

சத்குருவால் நிறுவப்பட்ட இந்த மையம், கோயம்புத்தூரில் உள்ளது. இங்குள்ள லிங்க பைரவி ஆலயம் 'பூத சுத்தி விவாஹங்களுக்கு' பிரசித்தி பெற்றது. பஞ்சபூதங்களை சுத்திகரித்து இருவர் இணைவதே பூத சுத்தி விவாஹம். இது மிகவும் புனிதமான திருமணமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதோடு, இந்த பூஜை இருவர் இடையேயான ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்தை வழங்குகின்றது என்றும் ஈஷா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Listen News!