• Apr 20 2026

சீதாவுக்கு வந்த ஐடியா; சென்டிமென்டாக பேசி மீனாவை ஆஃப் பண்ணிய லட்சுமி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  சபரிமலைக்கு சென்ற முத்து மீண்டும் வீட்டுக்கு வருகின்றார். அங்கு மீனா இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.  

பின்பு மீனா, இனி நீங்க குடிக்க மாட்டீங்க தானே என கேட்க,  விசேஷ நாட்களில் மட்டும் குடிப்பேன் என்று சொல்லுகின்றார் முத்து. மேலும் இதனை கடவுளிடம் சொன்னதாகவும் அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறுகின்றார். 

பின்பு தன்னுடைய அம்மா வீட்டிற்கு பிரசாதத்தை கொண்டு சென்று கொடுக்கிறார் மீனா. அப்போது அங்கு வந்த சீதா, தன்னுடைய ஆஸ்பத்திரியில்  வேலை செய்த அக்கா  பணத்தை  திருடிவிட்டதாகவும்,  அது தனக்கு தெரிந்த போது குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று கையைப் பிடித்து அழுததாகவும் சொல்லுகின்றார்.


மேலும் தானும் இப்போ அவருடைய தப்புக்கு துணை போற மாதிரி  இருக்குது.  இந்த விஷயம் வெளியே வருவதற்கு முன்பே அதனை சரி செய்ய வேண்டும் என்று சொல்ல, மீனா அதைப் பற்றி யோசிக்கின்றார். 

இதைத்தொடர்ந்து  ரோகிணியை சந்திப்பதற்கு மகேஸ்வரி வீட்டுக்கு செல்கின்றார். அதற்கு லட்சுமி மீனாவிடம் நல்லா இருக்கியா என்று கேட்க,  நான் எப்படி நல்லா இருக்க முடியும்? உங்களுடைய பெண்ணால்  நிம்மதி இல்லாம இருக்கிறேன் என்று கோபத்துடன் பேசுகின்றார். 

எனினும்,  ரோகிணியின் வாழ்க்கை நல்லா இருக்கணும்.  அவர் செஞ்ச தப்புக்கு எல்லாம் நானும் ஒரு வகையில காரணம்.  அதனால் தான்  இந்த தடவை அவளுடைய முடிவில் நான் தலையிடவில்லை  இந்த விஷயம் உனக்குத் தெரிந்தது சந்தோஷம்தான் என்று சென்டிமென்டாக பேசுகிறார் லட்சுமி.

அந்த நேரத்தில் அங்கு வித்யாவும் வந்து மீனாவை பார்த்ததும் க்ரிஷை பார்க்க வந்தீங்களா?  நீயும் மகேஸ்வரியை பார்க்க வந்தியா என்று ரோகினியை பார்த்து கேட்டு மாட்டிக்கொள்ளுகின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட் .



 

Advertisement

Advertisement