• Dec 02 2025

2வது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா... மணமகன் யார் தெரியுமா.?

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சமந்தா, இன்று (டிசம்பர் 1, 2025) கோவை ஈஷா யோகா மையத்தில் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமந்தா தனது திறமையான நடிப்பால் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். இவர் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இருக்கிறார். இதுவரை பல தடவை ரசிகர்கள் இவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.

சமந்தா மற்றும் ராஜ் நிடிமோர் திருமணம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்துள்ளது. திருமண விழாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது. 


சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருவின் திருமண புகைப்படங்கள் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமந்தா கடந்த காலங்களில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் காதல் வாழ்க்கை மற்றும் திருமண அனுபவங்களை அனுபவித்திருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதன் பின்னர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா உடன் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். இதனால் சமந்தா தனியாக இருந்தபோது, ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் சமந்தாவின் அடுத்த வாழ்க்கை அனுபவம் குறித்து ஆர்வம் காட்டினர். இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement